ஸ்ரீ ரா.கிருஷ்ணசாமிநாயுடு-காமராஜ். 1932ல் இராஜபாளையம் வட்டம் தொம்பக்குளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது.

ரா. கிருஷ்ணசாமி நாயுடு

தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தமர் தலைவர் ரா.கி அவர்கள்.

சேவையில் தொண்டராகி

தியாகத்தால் தலைவராகி

பார்வையில் எளிராகி 

பண்பில் உயர்ந்தோராகி

நாவையும் காப்போராகி

நாவண்மை மிக்கோராகி

தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள் ராகி 

                                                                               நாணய விளக்கே ! ஓயா

நற்பணிக் குன்றே ! என்றும்
ஆணவமில்லா வேந்தே !
அயர்வில்லா தேசபக்தி.
நீணெடுங்காலம் கொண்டோய் !
நீ எமை விட்டுச் சென்று
நாணடந்தாலும் நாங்கள்
நாளெல்லாம் நினைப்போம் உன்னை.
கவிஞர் கண்ணதாசன்ஸ்ரீவில்லிபுத்தூர்  வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 1902ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிகல்வி பின் பல அறிஞர்களை அணுகி முயன்று கல்வி கற்று புலவரானார். இசைஞானமும், பக்தியும் மிகுந்தவர்.

1922ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார்.

1930ல் சட்டமறுப்பு இயக்கம் .

1940ல்தனிநபர் சத்தியாகிரகம்.

1942ல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார்.

அக்காலத்தில் அரசியல் சுற்றுபயணம் மிக கடினம்,

போராட்டம் தீவிரவாதம் போன்றது, சிறைவாசம் நரகம்.

தன் குடும்பம், தொழில் தனதுசுகதுக்கங்களை துறந்து

நாட்டுக்காக அரசியல் துறவியானார்.

அவர் காலத்தில் ஏனயோர் பெரும் நிலசுவான்ந்தார்,பெரும் தொழிலதிபரானார்கள். கட்சிபணிக்காக ஓய்வின்றி கடுமையான நீண்ட பயணங்கள்

அவரது நாட்குறிப்பை படிப்போரை வியக்கவைக்கும்.

1924 ம் ஆண்டிலிருந்து அன்றய காங்கிரஸ் இயக்கத்தில்ரா.கி.பல பொறுப்புகளை வகித்து இறுதியில்தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவே உயர்ந்தார்.

1926 ல் தனது கிராமத்தில் சேலம் வரதராஜுலு அவர்கள் தலமையில் தேசீய காங்கிரஸ்மாநாடு மிகச்சிறப்பாக நடத்தினார் அன்றைய இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராககாமராஜ்இருந்தபோது ரா.கிசெயலாளராகபலஆண்டுபணிபுரிந்தார்.

1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர்

1962 முதல்1967 வரை அதன் தலைவராகவும் ரா.கி இருந்தார்.

இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள்

காமராஜர் 1946 - 1952,சுப்பராயன் 1952 - 1954,

கக்கன் 1954 - 1957 ராஜாராம் 1957 - 1959,

ஓ.வி. அழகேசன் 1959 - 1962

ரா.கிருஷ்ணசாமிநாயுடு 1962 - 1967

சி. சுப்பிரமணியம் 1967 - 1969,கக்கன் 1969 - 1972

பி. ராமச்சந்திரன் 1972 - 1977,

எஸ்.வி. லட்சுமணன் 1977 - 1980 மரகதம் சந்திரசேகர் 1980 - 1981

,பழனியாண்டி 1981 - 1988 மூப்பனார் 1988 - 1989,

வாழப்பாடி ராமூர்த்தி 1989 - 1995 குமரிஅனந்தன் 1995 - 1997,

தங்கபாலு 1997 - 1998 திண்டிவனம் ராமமூர்த்தி 1998- 2000

1969-ல் காங்கிரஸ் உடைந்து இந்திரா காந்தி தலைமையில்

இந்திராகாங்கிரஸ்உருவானபோது1980வரைஇருந்ததலைவர்கள்

ஆர்.வி.சாமிநாதன்,ஏ.பி.ஜி.வீரபாகு, கே.எஸ்.ராமசாமி,

ராமையா, இளையபெருமாள், எம்.பி.சுப்ரமணியம் ஆகியோர் இருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிதியை சிற்றுண்டி காபி செலவுக்காக

எடுக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் ரா.கி. யின் பெயருக்கு வரும்

தபால்களின் மேலுறைகளை குறிப்புகள் எழுத பயன்படுத்துவார்

அவசியமில்லாத நேரங்களில் மின்விளக்கு,

மின்விசிறி இயங்குவதை கண்டால் அவரே சென்று நிறுத்துவார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மும்முறை வெற்றி பெற்றார்.

பதிணைந்து ஆண்டுகள் சட்டப்பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்த ரா.கி.

அரசியலில் பெரும் அதிகாரங்களை கொண்ட பதவிகளை வகித்த ரா.கி.

தமது கதர் ஆடைகளை ஒருபோதும் சலவைக்கு போட்டதில்லை

வீட்டில் துவைத்து காயவைத்த ஆடைகளையே அணிவார்.

சொந்த வாகனம் அவருக்கென்று ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாக பேருந்தில் பயணம் செய்வார்.

பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுபணத்தை

எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து

ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்கையின் முக்கியமான செய்தி.

காந்தியடிகளின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில்

காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார்.

கருமி அல்லர் ஆடம்பரத்தை விரும்பாதவர்.

மகாத்மா காந்தி வழி காமராஜர் காமராஜர் வழி ரா.கி.

வினோபாவின் பூமி தான கொள்கைகாக ஏழை அரிஜனங்களுக்கு

தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய வள்ளல்.

சீன யுத்தநிதி திரட்டி தமது குடும்பங்கையும் சேர்த்து

அன்றய பாரத பிரதமர் லால்பகதூர் ஸாஸ்திரி அவர்களிடம் சமர்ப்பித்தார்.

அரசின் நிதி உதவிய நாடாமல் பள்ளி, வங்கி, வாசகசாலை போன்ற பலவற்றை

உள்ளூர் மக்களின் துணையோடு நிர்மாணம் செய்தார்.

பல கூட்டுறவு அமைப்புகளில் முக்கியபொறுப்பு வகித்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது

தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர்.

பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார்.

“இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி.டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம்பெற்றுவிட்டது.

தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன்முதலில் தமிழக அரசு சின்னமாக

அறிவித்தவர்பி.எஸ்.குமாரசுவாமி ராஜா ஆவார்.

தற்போதைய தமிழக அரசு சின்னம் 1956ல் அறிமுகப் பட்டது.

அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது.

பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருப்பணி.


சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இராஜகோபுரம் காலப்போக்கில் விமானத்தில்கலைநயமிக்க சிற்ப்பங்கள் சிதலமடைந்து விழுந்தும் கோபுரங்களில் விரிசல்கள் தோன்றின. 1964ல் அப்போதய முதலமைச்சர் திரு பக்தவச்சலம் அவர்கள் ஸ்ரீ ரா.கி.தலைமையில் திருப்பணிக்குழு அமைத்து, அரசு வல்லுநர் குழு கோபுரத்தை ஆய்வு செய்ய பணித்தார். கோபுரத்தின் விமானம் அதிக விரிவான தோற்றத்துடனும் அதிக எடைகொண்டதுமாகும். கோபுரத்தின் பதினோறு நிலைகளில் உள்ள மரதூண்கள், தாங்கிகள், பல கலைநயமிக்க மரசிற்ப்பங்கள் சேதமுற்றும் மேல்நிலைகளில் உள்ள சுவர்களில் சுதை பெயர்ந்து வலுவிழந்தும், கோபுரத்தின் அடிவாரத்தை சுற்றிலும் அகழி போன்ற கழிவு நீரோடையில் நீர் தேங்கியதால் கோபுரத்தில் விரிசல் ஏற்ப்பட்டதாக அறிந்தனர். கோபுரத்தில் காற்றுவிசை யந்திரம் கொண்டு பல துளையிட்டு சிமிண்ட்காங்க்ரீட் கலவை செலுத்தி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

பின் பல கட்டங்களில் சீரமைப்புபணி நடைபெற்றது.


விவசாயிகள் போராட்டம்


1972 ல் விவசாயிகள் ஒரு பைசா மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி நடத்திய போராட்டத்தில் நாடே வியக்கும் அளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வரலாறு காணாத அளவில் மிக பெருமளவில் ஸ்ரீவில்லிபுத்தூர்  , இராஜபாளையம், மற்றும் சிவகாசி வட்ட பொதுமக்கள் விவசாயிகள் மாட்டுவண்டியுடன்

தலைவர் ஸ்ரீ ரா.கிருஷ்ணசாமிநாயுடு அவர்கள் தலைமையில் அறவழியில் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது. மேலும் வந்த விவசாய பெருங்குடிமக்கள் நகருக்குள் வரஇயலவில்லை.புறநகர்சாலை முழுவதும் மாட்டுவண்டியுடன் ஸ்தம்பித்து நின்றனர். இன்நிலையில் ஆளும் கட்சியினரின் அதிகார துஸ்பிரயோகம் துவங்கியது. தி.மு.க. பிரமுகர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து பல லாரிகளில் ஆயுதங்களுடன் அடியாட்களை தறுவித்து ஸ்ரீவிலிபுத்தூர் நகருக்குள் வந்து அப்பாவி விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தலைவர் ஸ்ரீ கிருஷ்ணசாமிநாயுடு அவர்கள் தாக்கப்பட்டபோது விபரீதத்தை உணர்ந்த நேயமிக்க போலீசாரின் துணையுடன் தலைவரின் உண்மை தொண்டர்கள் தலைவரை பாதுகாப்புடன் அவரது இல்லத்துககு அழைத்து சென்றனர். தி.மு.க. ஆதரவாளர்கள் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியும், மாட்டுவண்டிகளை சேதப்படுத்தியும், மூடியிருந்த பல கடைகளை உடைத்து திறந்து சூறையாடியும்,ஸ்ரீவிநகர் மேலரதவீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு சூறையாடி தீக்கிரையாக்கினர் அலுவலகத்தில் மதிப்பிடமுடியாத பல ஆவணங்கள் அழிந்து போயின.மேலும் திருப்தியடையாத தி.மு.க.வெறியாளர்கள் தலைவர் ஸ்ரீ.ரா.கி.அவர்கள் இல்லத்திற்க்குசென்றுகொலைமுயற்சியில்ஈடுபட்டனர். ஸ்ரீ.ரா.கி.அவர்களின் நன்பர்களும்,குடும்பத்தினரும் தலைவர் ஸ்ரீரா.கி.அவர்களை வற்புறுத்தி மிகுந்த சிரமத்துடன் வீட்டின் புழக்கடையில் சுற்று சுவர்மீது ஏறி கழிவு நீரோடை வழியே பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்றனர். தலைவர் ஸ்ரீ ரா.கி.அவர்கள் குடியிருந்த வாடகை இல்லத்தை சேதப்படுத்திசூறையாடினர் அக்காலத்தில் நவீன தொழில் நுட்பங்கள் இல்லாததால் பல உண்மை சம்பவங்கள் செய்திஆவணங்களில் இல்லை. மேலும் தலைவர் ஸ்ரீ.ரா.கி. அவர்கள் ஆடம்பரமின்றி சேவை செய்பவராகையால்விளம்பரமும்இல்லை.

வெளி இணைப்புகள்:

. 

Link: 1-  http://raakei.blogspot.com/

        2- http://kamaraj-rk.blogspot.com/

        3. http://raakee.yolasite.com/                   

                                clik on the image

                             

mailto: n.srither@yahoo.com

mailto: srither240255@gmail.com.


 
Make a Free Website with Yola.